Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடங்கியது பி.ஆர்க் கலந்தாய்வு!

பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை படிப்புக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்


பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தொடர்ந்து 20 நாள்கள் நடைபெற்ற இந்தப் பொறியியல் கலந்தாய்வில் 91,894 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகபட்சமாக, மெக்கானிக்கல் படிப்பை 38,353 பேர் தேந்தெடுத்துள்ளனர். இ.சி.இ படிப்பை 33,900 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.


இதையடுத்து, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, இதுவரை பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளாதவர்களும், சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்களும் சிறப்புப் பொறியியல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.


இந்நிலையில், இன்று பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று காலை 7 மணி அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதையடுத்து காலை 8.30 மணி முதல் பிற மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close