Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசின் ஊழல் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிடும் வைகோ!

வைகோ

''தமிழகம் முழுவதும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும் பணிக்குத் தேர்வான தகுதியான ஒப்பந்தக்காரர்களிடம் கறாராகப் பேசி 11.5 சதவிகித கமிஷனை ஆகஸ்ட்  21-ம் தேதி மாலை 4 மணிக்குள் அதிகாரத்தில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் ஒப்படைத்திட வேண்டும்' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு முறையாக நீரைத் தேக்கி வைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்பதை ம.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்சமயம், உலக வங்கி நிதியுதவியுடன் நவீன முறையில் நீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்த மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 640 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு தமிழகத்தில் சுமார் 3,000 கண்மாய்களை சீரமைக்கும் பணிக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன. 

தற்போது அந்த ஒப்பந்தப் பணிக்குத் தகுதியானவர்களுக்கு வேலை அனுமதி வழங்குவதற்கு முன்பாக பொதுப்பணித்துறையின் மண்டல தலைமைப் பொறியாளர் பொறுப்பில் உள்ளவர்கள், தத்தமது மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்களிடம், ஒப்பந்தக்காரர்களிடம் கறாராகப் பேசி 11.5 சதவிகித கமிஷனை வருகின்ற 21.08.2017 திங்கள் மாலை 4 மணிக்குள் அதிகாரத்தில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் ஒப்படைத்திட வேண்டுமென வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதில் சட்டவிரோதமாக சுமார் 75 கோடி ரூபாய் கமிஷன் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், பொதுப்பணித்துறையின் கீழ்மட்ட அலுவலர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஒப்பந்தக்காரர்களிடம் வசூலித்து கமிஷனை கொடுத்துவிட்டு வேலை அனுமதி வழங்க முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

விவசாயிகளின் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டிய கண்மாய் குடிமராமத்துப் பணிகளையும் விட்டு வைக்காமல் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க முயலும் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் ம.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் நீராதாரத்தை மேம்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், வீணாகும் மழை நீரைத் தேக்கி வைக்கவும் இக்குடிமராமத்துப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நிச்சயமானதாகும். இதில் ஊழல் கமிஷனுக்கு இடம்பெறாமல் செயல்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close