Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவாரூருக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம்: பெ.மணியரசன் அறிவிப்பு

தமிழக அரசின் ஏற்பாட்டில் இன்று மாலை திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரூரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் என இதன் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''காவிரி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஆகஸ்டு 17-ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளலாம். தமிழகத்துக்கு உரிய தண்ணீரைக் கொடுத்தால்போதும். அதற்காக ஒரு தனி கண்காணிப்புக் குழுவை உருவாக்கினால்போதும் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆட்சியாளர்கள், மத்திய அரசிடமும் கர்நாடக அரசிடமும் விலைபோய்விட்டார்களோ என நாங்கள் சந்தேகப்படுகிறோம். ரகசியமாகப் பேசி உச்ச நீதிமன்றம் வழியாக கட்டப்பஞ்சாயத்துக்குத் தயாராகிவிட்டார்களோ எனவும் சந்தேகப்படுகிறோம். காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்ட தமிழக ஆட்சியாளர்களே அனுமதி தருவதென்பது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகம். இந்த இழிசெயலை கண்டித்து  திருவாரூருக்கு இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகைத்தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் கறுப்புக்கொடி காட்டுவோம்'' என்றார்.

பெ.மணியரசன் இந்த அறிவிப்பால் சீருடை அணியாத காவல்துறை அதிகாரிகள் பலர் திருவாரூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close