Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ-வின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகளைத் தொடங்கியது தமிழக அரசு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடங்கின. 

போயஸ் கார்டன் இல்லம்


ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் 'வேதா நிலையம்' நினைவிடமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கும் முன் தங்களிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தீபக் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

தமிழக அரசின் இந்த முயற்சியைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாக தீபா கூறினார். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு கண் துடைப்பே என்றும் விமர்சனக் குரல்கள் எழுந்தன. இந்தநிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. வேதா நிலையம் இல்லம் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் அளவெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close