Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காரை நிறுத்திய தொண்டர்கள்! இறங்கி வந்து சந்தித்தார் முதல்வர் பழனிசாமி

திருவாரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து விமானம்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார்.

எடப்பாடி பழனிசாமி

திருச்சி வந்த முதல்வரை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், எம்.பி-க்கள் ரத்தினவேல் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்தே சென்று பொது மக்களைச் சந்தித்தார்.

அப்போது பொதுமக்கள், தொண்டர்கள் பொன்னாடை போர்த்தியதை ஏற்றுக்கொண்டு காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினார். முதல்வர் வருகையையொட்டி பத்திரிகையாளர்கள் அவரைச் சந்திக்க முயன்றபோது, ' வரும்போது பேசலாம்' என ஒரே வரியில் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமி

 

எடப்பாடி பழனிசாமிமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகையை முன்னிட்டு, வழக்கத்தைவிட அதிகமான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவரின் வருகைக்காக, திருச்சி விமானநிலையம் முதல், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் வரை சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் துயரத்துக்குள்ளானார்கள். அதிலும் வாகன ஓட்டிகள் கடுப்பாகி வாகனத்தை முடுக்க, அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் சிலர், இந்தப்பக்கம் வராதீங்க!, பைக்கை நிறுத்துங்க! என அதட்டினார்கள்.


நீண்ட நேர பரபரப்புக்குப் பிறகு, அந்த வழியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சாலை ஓரமாக நின்றுக்கொண்டிருந்த தொண்டர்கள் பூங்கொத்தைக் காட்ட, தனது டிரைவரைப் பார்த்து வாகனத்தை நிறுத்தச் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் பூங்கொத்தை வாங்கிக்கொண்டு கிளம்பினார். 'சி.எம் இவ்வளவு சிம்பிளா இருக்கார். இந்தப் போலீஸ்காரர்கள் இவ்வளவு பந்தா காட்டுறாங்களே...' எனத் தலையில் அடித்தபடி பொது ஜனங்கள் கிளம்பினர்.


 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close