Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிராமத்துக் கதையைக் கையில் எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்!

எஸ்.பி.ஜனநாதன்

தன் ஒவ்வொரு படத்துக்கும் குறிப்பிட்ட இடைவெளியை எடுத்துக்கொள்பவர், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' படத்துக்குப் பிறகு, இவர் இயக்கவிருக்கும் படம், முழுக்க கிராமத்து வாழ்வியலைப் பதிவுசெய்யும் முயற்சியாக இருக்கும் என்கிறார்.

'சினிமாவுல பார்த்த கிராமத்துக் கதைகள் எனக்குத் திருப்தியா இல்லை. அண்ணன் - தம்பி தகறாரு, இரு ஊர்களுக்குமான பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து, காதல்... இப்படித்தான் கிராமத்து சினிமாக்கள் தமிழ்ல வந்திருக்கு. அதைத் தவிர்த்து, ஒரு கிராமம் எப்படி இருக்கு. கிராமங்களில் இருக்கும் பிரச்னைகள் என்ன என்பதை என் அடுத்த படத்தில் பதிவு பண்ணப்போறேன். அதற்கான வேலைகள்தான் நடந்துக்கிட்டிருக்கு' என்கிறார், எஸ்.பி.ஜனநாதன்.

கதைக்காக, திருநெல்வேலியில் இருக்கும் 2,000 ஆண்டுகள் பழைமையான மரம், கேரளாவில் இருக்கும் மிகப் பழைமையான மரங்கள் என லொக்கேஷன் பிடித்துக்கொண்டிருக்கிறார், எஸ்.பி.ஜனநாதன். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் விரைவில் வரும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close