Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சிசு வதையை மறைக்க பசு வதை'- மத்திய அரசுமீது குற்றச்சாட்டு

மத்திய அரசைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ சார்பில் பேரணி நடந்தது.

நாடு முழுவதும் பசுவின் பெயரால் அப்பாவி மனிதர்களை அடித்துக் கொலைசெய்யும் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதற்கு பிரதமர் இதுவரை கண்டனம் தெரிவிக்காததைக் கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இன்று கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், பெண்கள் குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்ட கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாடு முழுவதும் இதுவரை பசுவின் பெயரால் 28 பேர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும். தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்மமான முறையில் 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர். பா.ஜ.க, சிசு வதையை மறைக்க பசு வதை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துவருகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுவருகிறது. தனிமனித சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிட்டு வருகிறது'' என்று குற்றம்சாட்டினார்.

தமிழகம்  முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பசுவின் பெயரால் அப்பாவி மனிதர்களை அடித்துக் கொலைசெய்யும் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பிரதமர் கண்டனம் தெரிவிக்க முன்வராததைக் கண்டித்தும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close