Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஜெ’ தீபா பேரவையின் பொறுப்பாளர் கள்ளச்சாராய வழக்கில் கைது...

‘ஜெ’ தீபா பேரவையின் விழுப்புரம் மாவட்ட செயலாளரான மணிகண்டன், கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அதற்குப் பிறகு, அவரது அண்ணன் மகளான தீபா “எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை” என்ற புதிய அமைப்பைத் தொடங்கியதோடு, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, அந்த அமைப்புக்கு மாவட்ட வாரியாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஜெ தீபா

அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு கே.மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். திரைப்பட நடிகர் கார்த்திக்கின் நடிகர் சங்கத் தலைவராக இருந்த இவர், தீபா கட்சி தொடங்கியதும் அவரது காலில் விழுந்து, அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார். விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் இருக்கும் இவரது வீட்டில், அவரது அண்ணன் அசோக் குமார் என்பவருடன் இணைந்து கள்ளச்சாராயத்தைப் பதுக்கிவைத்து விற்பனைசெய்துவருவதாக மேற்கு காவல் நிலையத்துக்குப் புகார் வந்திருக்கிறது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் அதிரடி சோதனையை மேற்கொண்ட காவல்துறையினர், கள்ளச்சாராயத்தை விற்பனை செய்துகொண்டிருந்தவர்களைக் கைதுசெய்தனர். அதேபோல, ‘ஜெ’ தீபா பேரவையின் மாவட்டச் செயலாளரான மணிகண்டன் வீட்டில் மட்டும் சுமார் 20 லிட்டர் அளவுக்கு கள்ளச்சாராயம் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்துவந்ததையும் கண்டுபிடித்தனர். அதையடுத்து, போலீஸார் மணிகண்டனை கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைதுசெய்துள்ளனர். இது, இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close