Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பாராளுமன்றம்: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்

இயற்கை வளம் சார்ந்த வளர்ச்சி என்ற புதிய கருத்தை முன் வைத்து 'மக்கள் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பாராளுமன்றம்' தொடக்க விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர்  கலந்துகொண்டனர். மேலும், 'மக்கள், சாதி, இனம் மொழி கடந்து மனித நேயத்துடன் இணக்கமாக வாழ்தல் என்ற நோக்கில் அகில இந்திய அளவில் 623 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது' என அதன் தலைவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் பேசும்போது, 'இந்தியா தனது சுதந்திரத்தின் 71-வது ஆண்டை கொண்டாடும்போது நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் அரசின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின் படி 92 சதவிகிதம் குடும்பங்களின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரத்துக்கு கீழே உள்ளது. 75 சதவிகித குடும்பங்களின் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளது. 

அரசியல் சாசனம் கூறும் எல்லாருக்கும் சம உரிமை சம வாய்ப்பு என்பது இன்னும் நிறைவேற்றப் படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் மாறி மாறி இதுவரை இருந்த மத்திய அரசுகள் கொண்டு வந்தாலும் பெருவாரியான மக்களை சென்று சேரவில்லை. வளர்ச்சித் திட்டங்களில் பெரும்பாலானவை கார்ப்ரேட்டுகளுக்குத்தான் சென்று அடைந்திருக்கிறது. விளிம்பு நிலை மக்கள் மேலும்  புறக்கணிக்கப்படுகின்றனர். நாட்டின் பெரும்பகுதி கடன்களும், பெரும் நிறுவனங்கள், பெரும் முதலாளிகளுக்கும் கொடுக்கப்பட்ட கடன் தொகைகள் சிக்கலில் சிக்கி உள்ளது.

மத்திய அரசு பெரும் முதலாளிகளின் கடன்களை வாராக்கடன்களாக தள்ளுபடி செய்யும் நிலையும் சாதாரண மக்களின் வங்கிக் கடன்களை திரும்பப் பெறுவதில் முனைப்பும் காட்டுகிறது. இயற்கை வளங்களை பயன்படுத்தி உள்ளூர் மக்களுக்கு பயன் தரும் வகையில் இயற்கை வளம் சார்ந்த வளர்ச்சி என்ற புதிய கருத்தை முன் வைத்து மக்கள் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பாராளுமன்றம் தொடங்கப் பட்டுள்ளது . மக்கள் சாதி, இனம், மொழி கடந்து மனித நேயத்துடன் இணக்கமாக வாழ்தல் என்ற நோக்கில் அகில இந்திய 623 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்பட இருக்கிறது. தொழிலின் அடிப்படையில் தேவைப்படும் கடன், கால தாமதமின்றி உடனடியாக வங்கிகள் மனு கொடுத்த மாத்திரத்தில் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் கொடுப்பதை இந்த மக்கள் பாராளுமன்றம் முயற்சியோடு செயல்படும்' என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close