Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிராம பாரம்பர்யத் திருவிழாவில் கூத்துக்கட்டிய கல்லூரி மாணவர்கள்!

மதுரை, துவரிமான் கிராமத்தில் கிராம் பாரம்பர்ய திருவிழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி மூலமாக தமிழர் பாரம்பர்யம், பண்பாடு, கலை மறைந்து வரும் பழைமையான வீர விளையாட்டுக்களை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் அமைத்திருந்தனர்.

இதில் மதுரைக்கு வெளியே அமைந்துள்ள ஒன்பது கல்லூரிகளின் மாணவர்கள் கலந்துகொண்டனர். நெதர்லாந்தின் 'பூமியின் தூதுவர் குழுவை'ச்சார்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி துவரிமான் சிவன் கோயிலில் அமைக்கப்பட்ட பாரம்பர்ய  கண்காட்சியில் பழைமையான பொருள்கள், மருத்துவ குணமுள்ள அறிய வகை செடி கொடிகள், பாரம்பர்ய  உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஊர் மக்களும் மாணவர்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் அரங்கேற்றப்பட்டது.  மேலும், கல்லூரி மாணவர்களின் சார்பாக தெருக்கூத்து, கும்மிப்பாட்டு, நாடகப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றிப் புள்ளிகள் அதிகம் பெற்ற வடபழஞ்சி செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close