Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க அணிகள் இணைப்பு: மு.க.ஸ்டாலின் பரபரப்புப் பேட்டி!

அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் சூழலில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றபடி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நடித்துக் கொண்டிருக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மாற்றியது எந்த காரணத்திற்காக? டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றபடி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நடித்துக்கொண்டிருக்கின்றனர்' என்று கூறியுள்ளார்.

வெகு நாள்களாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எடப்பாடி பழனிசாமி, 'விரைவில் நல்ல செய்தி வரும்' என்றும், ஓ.பி.எஸ், 'இன்னும் ஒரிரு நாள்களில் நல்ல முடிவு எட்டப்படும்' என்றும் தெரிவித்தனர். இதையொட்டிதான் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close