Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மத்திய அரசு இயக்கும் பதுமைகள் அ.தி.மு.க': கனிமொழி கிண்டல்!

சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார்.  

கனிமொழி

அப்போது அவர் பேசுகையில், "பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, மக்கள் அ.தி.மு.க இணைப்பு நாடகத்தைதான் ஆர்வமாக தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். அ.தி.மு.க அரசானது மத்திய அரசு இயக்கக் கூடிய பதுமைகளாக மாறிவிட்டது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஆரம்பத்திலேயே தமிழக அரசு முயற்சி செய்யாதது ஏன்? தமிழக மாணவர்கள் தரத்தை நிர்ணயிப்பதற்கு மத்தியில் இருப்பவர்கள் யார்? மத்தியில் இருப்பவர்கள் இதுவரை எத்தனை மருத்துவக் கல்லூரிகளை கட்டியிருக்கிறார்கள். திராவிட கொள்கைகளை உடைக்கும் திட்டங்கள் தமிழகத்தின் மீது மத்திய அரசால் திணிக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியைத் தடுக்கும் வகையில், பல்வேறு செயல்களை தற்போது மத்திய பா.ஜ.க  அரசு செயல்படுத்தி வருகிறது" என்றார்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, "நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு நினைத்தால் நிரந்தர விலக்கு அளிக்க முடியும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் பாதிக்காதவாறு மருத்துவ படிப்பு விவகாரத்தில், மத்திய  அரசு தீர்வு காண வேண்டும். தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, தமிழகத்தில் ஆளும் அரசு எதையும் செய்யத் தயாராக உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான பிரச்னைகளை திசை திருப்பும் வகையில்,  இணைப்பு இணைப்பு என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். செயற்கை உணவுக்குழாய் மாற்றபட்ட பிறகு கருணாநிதி நலமாக இருக்கிறார்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close