Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் வேளாண் தேவதைகளுக்கு நடந்த விழா..!

மதுரை காந்தி மியூசியத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் உலக தேனீ தினமும், தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமும் நேற்று நடைபெற்றது. விவசாயத்துக்கும், மனிதர்களுக்கும் பல நன்மைகள் செய்யும் தேனீக்களை பற்றி அறிய தகவல்களை கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேனீக்களின் பலன்களைப் பற்றி சிறப்பான உரை நிகழ்த்தினார். ''உலக தேனீ தினமானது 2009-ம் ஆண்டு முதல் தேனீக்களையும், தேனீ வளர்ப்போரையும் ஊக்குவிப்பதற்காக கொண்டாடப்பட்டு வருகிறது.  'தேனீக்கள்  இம்மண்ணிலிருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சமிருக்காது' என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.  தேனீக்கள் மூலம்தான் பூமிக்கு பல நன்மைகள் விளையக்கூடும்.  இந்தியாவின் தேன் உற்பத்தி 65 மெட்ரிக் டன் ஆகும்.  இதில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.  அதன் உற்பத்தி 72.34 டன் ஆகும்.  இந்தியாவில் தேனீக்களின் அளவு குறைவதால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் வருடத்துக்கு 3,000 கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

உழவர்களின் உற்ற நண்பனாக உழவுக்கு உறுதுணையாக உதவும் இந்த தேனீக்கள், வேளாண் தேவதைகள் என வர்ணிக்கப்படுகின்றன.  மதுரை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் மூலம் 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை தேனீ பிரித்தெடுக்கும் இயந்திரங்களை 50 சதவிகிதம் மானியத்தில் 26.50 லட்சம் செலவில் 130 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் 2016-17-ம் ஆண்டில், 96,000 ரூபாய் செலவில் 6 விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் (2017-18) தேனீ பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.  எனவே, இந்த உலக தேனீ நாளில் விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார். தேனீ வளர்ப்பில் சாதனை அடைந்த விவசாயப் பெருமக்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close