Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமேஸ்வரம் கடற்கரையில் நதி நீர் இணைப்பை வலியுறுத்தும் மணல் சிற்பம்!

நதிகள் இணைப்பின் மூலம் அழிந்து வரும் விவசாயத்தைக் காக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், தினங்கள், கொண்டாட்டங்கள், சம்பவங்கள்  ஆகியன குறித்து விளக்கும் வகையில் மணல் சிற்பங்கள் வடிவமைப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதில் ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவர் உலக அளவில் புகழ்பெற்ற மணல்  சிற்பங்களை வடிவமைத்து பொதுமக்களின் பார்வைக்காக வைத்து வருகிறார். 

நதி நீர் இணைப்பு மணல் சிற்பம்

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியரான சரவணன் என்பவர் மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஒட்டி மணல் சிற்பங்களை அமைத்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார். மரம் வளர்ப்பு, வாக்காளர் விழிப்பு உணர்வு, புத்தக வாசிப்பு, மக்கள் ஒற்றுமை, தண்ணீர் சிக்கனம் போன்றவற்றில் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மணல் சிற்பங்களை வடிவமைத்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்திரை வாசிகள் கூடும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 'நதி நீர் இணைப்பின் மூலம் விவசாயத்தைப் பாதுகாக்கலாம்' என்பதை மையமாகக்கொண்டு இன்று மணல் சிற்பத்தை வடிமைத்துள்ளார். விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close