Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸ் சந்தேக வேட்டை... 'கஸ்டடி'க்குப்  போன 12 செல்போன்கள் !


      போலீஸ்

ளை சந்தேகப்பட்டு பார்த்திருப்பீர்கள்... கடைக்கு சர்வீசுக்கு வந்த செல்போன்கள் மீது போலீஸ் சந்தேகப்பட்டு பார்த்திருக்கிறீர்களா ? அப்படி ஒரு சந்தேக வழக்கில் சிக்கிக் கொண்டன 12 செல்போன்கள்.  அந்த பன்னிரண்டு செல்போன்களின் மீதும் சந்தேகம் தீராத போலீஸார், அவற்றை தங்கள் கஸ்டடியில் வைத்து கடந்த 10 நாள்களாக  பாதுகாத்த கதை இப்போது வெளியில் வந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில்தான் இந்தக் கூத்து நடந்திருக்கிறது. திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலையில் செல்போன்  சர்வீஸ் கடை வைத்திருப்பவர்  நிஸார்  அகமது. கடந்த 10-ம் தேதி இவரது கடைக்கு ஒரு எஸ்.ஐ. தலைமையில் போலீஸார் சென்றுள்ளனர். வழக்கம் போலவோ, அல்லது புதுவிதமாகவோ அங்கு போலீஸ் விசாரணை போயிருக்கிறது. அப்போது  கடையில் சர்வீசுக்காக வைக்கப்பட்டிருந்த 12 டச் ஸ்க்ரீன் செல்போன்களை பளப்பளவென மின்னலடிக்க, அதை  மொத்தமாக அள்ளியிருக்கிறது விசாரணைக்குப் போன போலீஸ். "இந்த செல்போன்களுக்கான பில்-களை கொண்டுவந்து காட்டிவிட்டு செல்போன்களை  ரிட்டர்ன் வாங்கிக்கலாம்" என்று சொல்லிவிட்டு செல்போன்களுடன் போலீஸார் கிளம்பியிருக்கிறார்கள்.

"கடைக்கு சர்வீஸ் செய்ய வந்த போன்களின் பில்கள் அதை சர்வீசுக்கு கொடுத்தவர்களிடம்தான் இருக்கும்" என்று நிஸார் அகமது சொன்னதை போலீஸார் காதில் வாங்கவில்லை. காவல் உயரதிகாரிகளைப் பார்த்து  நடந்ததைச் சொல்லி நிஸார்  அகமது, முறையிட்டிருக்கிறார். இதனால் செல்போன்மீது சந்தேகப்பட்டு அதை கஸ்டடிக்குக் கொண்டுபோன போலீஸார் மேலும் கொதிப்பாகி  உள்ளனர். "யாருகிட்டேப் போயி பிராது கொடுத்துட்டு வர்றே... போலீசுக்கே புகாரா?" என்றெல்லாம் பன்ச் வைத்து நிஸார்  அகமதுவை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் சரி, காவல் உயரதிகாரிகளின் காதுகளுக்காவது இது போனதா என்றால்... போயிருக்கிறது ! அவர்கள், "வேண்டாம்பா அந்த செல்போன்களை ரிலீஸ் பண்ணிடுங்க, அதுக பாவம்" என்று முடிந்தவரை அறிவுரை தந்துள்ளனராம்...உயரதிகாரிகளின் முதற்கட்ட அறிவுரை கவனிக்கப்படவில்லை... அடுத்த கட்டமாக அதற்கும் மேலான உயரதிகாரிகள் கொஞ்சம் காரத்தைக் கூட்டி போலீஸாரைக் கண்டிக்கவே கஸ்டடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றன செல்போன்கள் ! போலீசாரோ,  "திருட்டு செல்போன்களை செல்போன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதன் ஐ.எம்.ஐ. குறியீடை மாற்றி விற்பதாக  கிடைத்த தகவலின் பேரில்தான் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டதாக" கூறுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close