Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு..! குவியும் ரஜினி ரசிகர்கள்..!

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு திருச்சியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திருச்சியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

 

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடைபெறும் அரசியல் விழிப்பு உணர்வு மாநாட்டு தனது ரசிகர்கள் செல்லவேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அதனால், இந்த மாநாட்டுக்கு ரஜினி ரசிகர்கள் பெருமளவில் குவிந்த வண்ணம்உள்ளனர். 

இந்த மாநாடு ரஜினியால் நடத்தப்படவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து பரவலாக திருச்சிக்கு வந்துள்ளனர். ஆண்ட கட்சி, ஆளும் கட்சியை அகற்றுவோம். நதிகளை இணைத்திட புறப்பட்ட மக்களின் மனிதர், அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் தவிக்கத்தான் போகிறது, படையப்பாவின் கனவுகள் எல்லாம் பலிக்கத்தான் போகின்றது. ஒன்றிணைவோம் வெற்றிடுவோம் என சுளீர் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அதிகளவில் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்டுள்ளது. 

மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானத்தின், மேடையில் காந்தி, காமராஜர் ஆகியோரது படங்களுடன் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. மதுவற்ற மாநிலம், உண்மையாக இருப்போம், ஊழலற்ற தமிழகம் அமைப்போம் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பேனர்கள் முகப்பில் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாகப் பேசப்படுவதால், அவரின் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துவருகின்றனர். மேலும் தனி ஒரு இயக்கம் நடத்துகிறது எனப் பார்க்காமல், திருச்சி ரஜினி ரசிகர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கட், மரக்கன்றுகள், சாப்பாடும் வழங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன, தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ரஜினி அரசியலுக்கு வருவார்; அவர் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என தமிழருவி மணியன் பேச உள்ளார்.

ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டு வருவதை உளவுத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது திருச்சியில் மேக மூட்டமாக இருப்பதாலும், மதியத்திலிருந்து அவ்வப்போது திருச்சிக்குள் மழை பெய்துவருவதாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் பதற்றத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close