Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு!

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் இடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  பார்வையிட்டு ஆய்வுசெய்தார். 


 

கரூர் மாவட்டத்தில் வரும் 4.10.2017 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா, திருமாநிலையூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ்  உடன் ஆய்வுசெய்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அப்போது,பேசிய அமைச்சர், "மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கரூர் மாவட்டத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக, ஏற்கெனவே மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், பயனாளிகள் என 60,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வரக்கூடும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,  போக்குவரத்து நிறுத்தங்கள் என பணிகள் ஏற்பாடு செய்வது முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறுகிற மைதானத்தில் வரும் 18.9.2017 அன்று பல்வேறு துறை அமைச்சர்களுடன் கால்கோல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்று பள்ளி மாணவ, மாணவிகளின் மாரத்தான் ஓட்டம், விளையாட்டுப் போட்டிகள் துவக்கி வைக்கப்படவுள்ளன. மேலும், விழா சிறப்பாக நடைபெறுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close