Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில்  இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான இன்று, காலையில் தேரோட்டம் நடைபெற்றது.  

therottam

திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. கடந்த 10-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.  12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக, கடந்த 16-ம் தேதி நடைபெற்ற 6-ம் நாள் திருவிழாவில், குடவருவாயில் தீபாராதனையும் 18-ம் தேதி 7-ம் நாள் காலை, சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், சண்முக விலாசத்திலிருந்து சுவாமி வெட்டிவேர் சப்பரத்திலும் மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி, சப்பரத்தில் திருவீதியுலா வருதலும் நடைபெற்றது.  

therottam

தொடர்ந்து 8-ம் நாளான 19-ம் தேதி காலை 5 மணிக்கு, சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளி சப்பரத்திலும் காலை 10.30 மணிக்கு பச்சைசாத்தி, சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெற்றது. 10-ம் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு, ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  திருத்தேரோட்டம் நடைபெற்றது.

முதலில், செப்புத்தேரில் விநாயகர் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து பெரிய தேரில் சுவாமி குமரவிடங்கப் பெருமாள் வள்ளி, தெய்வானையுடன்  வீதியுலா வருதல் நடைபெற்றது. பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் வடம்பிடித்து இழுக்க, ரதவீதிகளில் வலம் வந்து நிலையத்தை அடைந்தது  திருத்தேர். இறுதியாக, வள்ளி அம்பாள் தனித் தேரில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது ஆவணித் திருவிழா.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close