Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிற்பகல் 3 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்பு?

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர், புதிய அமைச்சரவை பிற்பகல் 3 மணிக்கு பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், அவரது அணியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவை இன்றே பதவியேற்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பதற்காக ,மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக இன்று சென்னை திரும்புகிறார். அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு வெளியான பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், பிற்பகல் 2.30 மணிக்கு அஞ்சலிசெலுத்த உள்ளனர். இதையடுத்து, ஆளுநர் மாளிகை சென்று, புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close