Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வீட்டில் நிம்மதியா தூங்க முடியல!’ - பதறும் பழங்குடிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிகோயில் பகுதியில் இருளர்களுக்கான அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. 

கடந்த 3-ம் தேதி மழை காரணமாக அதில் உள்ள வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஐயம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது சார் ஆட்சியர் கிள்ளிவளவன் தலைமையில் அதிகாரிகள், இருளர் குடியிருப்பை ஆய்வுசெய்தனர். “கன்னிகோயில் பகுதியில் வசிக்கும் 26 இருளர் குடும்பங்களுக்கும் மாற்று இடத்தில் பட்டாவுடன் கூடிய தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். மழைக்காலம் என்பதால் பழைய வீடுகளில் யாரும் வசிக்க முடியாத நிலை உள்ளது. அதுவரை எங்களுக்கு நிவாரணத்தொகையுடன் மாற்று இடம் கொடுக்க வேண்டும். இறந்துபோன ஐயம்மாளின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்” என இருளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சார்-ஆட்சியர் கிள்ளிவளவன், இருளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அப்போது உறுதியளித்தார்.

இருளர்கள்

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழலில், செய்யூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் இருளர் மக்களுக்குக் குடிமனை பட்டா வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தில் இருளர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கான உட்கூறு நிதியை முழுமையாகச் செலவிட வேண்டும். விண்ணப்பித்துள்ள அனைத்து இருளர் மக்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதன் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close