Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொது இடத்தில் கால்களைப் பிடித்துவிடச் சொன்ன எம்.எல்.ஏ!

பொது இடத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் தன்னுடைய கால்களை பிடித்துவிடச் சொல்லி, உதவியாளர்களுக்கு உத்தரவிட்டதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

mla
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுத்தாறை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கலந்துகொண்டார். அப்போது அருகில் உள்ள ஒரு கோயிலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அந்தநேரத்தில், தன்னுடைய உதவியாளர்களிடம், கால்களை பிடித்துவிடுமாறு கூறியிருக்கிறார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து எம்.எல்.ஏ கலைச்செல்வனிடம் பேசினோம். "மணிமுத்தாற்றை சுத்தம்படுத்தும்போது பொதுமக்களோடு இணைந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தேன். எனக்கு குறைந்த ரத்த அழுத்தமும் சர்க்கரை குறைபாடும் உள்ளது. இதனால் கால் வீங்கி மயக்கம் வந்துவிட்டது. அருகில் இருந்தவர்கள் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டுபோய் அருகில் இருந்த கோவிலில் உட்கார வைத்து அங்கு கிடந்த அட்டையால் விசிறி விட்டார்கள். ரோட்டில் போகும் சாதாரண ஒரு மனிதனுக்கு இப்படியொரு பிரச்னை வந்தாலே பக்கத்திலிருப்பவர்கள் உதவி செய்வது இயல்பு. அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக நான் செயல்படுவதால், அவர் தரப்பில்தான் இதை தேவையில்லாமல் அரசியல் செய்கின்றனர்" என்றார் இயல்பாக.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close