Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதிகாரிகள் ஒத்துழைப்போடு கிராவல் மண் கடத்தல்!' - மக்கள் குற்றச்சாட்டு!

கரூர் மாவட்டம், தோகைமலைப் பகுதியில் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முறைகேடாக கிராவல் மண் கடத்தல் நடப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 
              

 


இதுபற்றி, கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் புகார் அளித்துள்ள விவசாயிகள் சிலரிடம் பேசினோம். "கரூர் மாவட்டம்,தோகைமலை ஒன்றியத்தில் வடசேரி,கழுகூர்,முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு ஏரி மற்றும் குளங்களில், விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல்மண் எடுத்துக்கொள்ளலாம் என்று குளித்தலை வருவாய்த்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால், விவசாயப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தாமல் வண்டல் மற்றும் கிராவல் மண்ணை சிலர் வெட்டிக் கடத்தி, முறைகேடாக விற்பனை செய்துவருகின்றனர்.

இதற்கு, சில அதிகாரிகள் முழு ஒத்துழைப்புத் தருகிறார்கள். இந்நிலையில்,தோகைமலை ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள வீரபத்ர நாயக்கர் குளத்தில், கடந்த ஒருமாத காலமாக வருவாய்த்துறை அனுமதி பெற்றுள்ளதாகவும், ஒன்றிய அலுவலகப் பணிக்காக மண் எடுப்பதாகவும் கூறி சிலர் கிராவல் மண் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, நாயக்கர்குளம்,ஆணைவீடு,வடக்கு விருந்திப்பட்டி,அண்ணாநகர்,புதுக்கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களாகிய நாங்க, குளித்தலை தாசில்தார் அருள்,தோகைமலை ஆர்.ஐ.வெங்கடேசன்,வி.ஏ.ஓ அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இருபது நாளைக்கு முன்னாடி புகார் கொடுத்தோம். ஆனாலும்,நடவடிக்கை எடுக்கப்படாம, தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் வீரபத்ரநாயக்கர் குளத்தில் தொடர்ந்து மண் எடுத்து வந்தார்கள். இதனால்,நாங்க மண் எடுத்தவர்களை தடுத்து,வெளியே போகச் சொன்னோம்.

'அதிகாரிகள் சப்போர்ட்டோடதான் மண் எடுக்கிறோம். எங்களை உங்களால ஒண்ணும் பண்ண முடியாது'னு தெனாவெட்டா சொல்லிட்டு,தொடர்ந்து மண் எடுக்கிறாங்க. அதனால்தான்,'அதிகாரிகள் சப்போர்ட்டோடு முறைகேடாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்திருக்கிறோம்" என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close