Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு அமைச்சர்கள் திடீர் வருகை 

ops house

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி  மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் திடீரென வருகை தந்துள்ளனர்.

தமிழகத்தில் டீக்கடை முதல் சமூக வலைதளங்கள் வரை ’அ.தி.மு.க இணைப்பு’ செய்திதான் இன்றைய ஹாட் டாபிக். எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ’இணையுமா இணையாதா’, ’சேருமா சேராதா’ என்ற இழுப்பறி நிலையே தொடர்கிறது. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நேரத்தில் முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாம்.

’பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வர முடியும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கடைசி நேர நிபந்தனைகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குத் திடீரென வருகை தந்தனர். அவர்கள், பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் அணிகள் இணைப்பு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close