Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆட்சி நீடிக்காது’ - கனிமொழி ஆரூடம்

அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் ஆட்சி தொடர்ந்து நீடிக்காது என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

கனிமொழி எம்.பி.


அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே, இணைப்பு குறித்து பேசுவதற்காக தலைமைக் கழகத்துக்கு வர முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.கவின் தலைமைக் கழகத்தில் சந்தித்துப் பேச இருக்கின்றனர். இரு அணிகள் இணைந்த பின்னர், சசிகலாவை நீக்குவது குறித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இந்தநிலையில், கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘ அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும், ஆட்சி தொடர்ந்து நீடிக்காது. அணிகள் இணைப்பால் தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கப்போவதில்லை’ என்று அவர் தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close