Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதவித் தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

நெல்லையில் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். 

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. விவசாயக் கூலித் தொழில் செய்து வந்தவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வறுமையின் பிடியில் அவர்களின் குடும்பத்தினர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பாக எந்த உதவியும் கிடைக்காததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். 

உதவித் தொகை

இந்த நிலையில் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை, ஆயிரம்பாரி, ஆசாத்நகர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பெண்களுக்கு முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படவில்லை என்கிற புகார் உள்ளது. தங்களின் பிரச்னைகளைத் தெரிவித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தப் பெண்கள் குற்றம் சாட்டினர். விவசாயம் இல்லாததால் கூலி வேலைக்குச் செல்ல முடியாத தங்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் உதவியும் கிடைக்காததால் குடும்பத்தை வழி நடத்த முடியாத நிலை இருப்பதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து, நெல்லை மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவரான நாகம்மாள் மாரியப்பன் தலைமையில் திரண்டு வந்த பெண்கள், தங்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையைக் கவனமாகக் கேட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close