Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அன்புள்ள ரஜினிகாந்த்' படத் தயாரிப்பாளர் பா.ஜ.க-வில் இணைந்தார்

தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பல பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் முயற்சியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். பல சினிமா பிரபலங்கள் பாஜகவுக்கு தங்கள் ஆதரவை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் இயக்குநர் விசு, கவிஞர் பிறைசூடன் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தற்போது சினிமா தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உடனிருந்தார். அழகன் தமிழ்மணி, சுதந்திரப் போராட்டத் தியாகி மணலி கந்தசாமி பிள்ளையின்  வளர்ப்பு பேரன் ஆவார். மலையூர் மம்பட்டியான், அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில் போன்ற பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னாள் பொருளாளராகவும் இருந்தார். நான் கடவுள், அழகர் சாமியின் குதிரை ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார்.

இது பற்றி அழகன் தமிழ்மணி பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதன் காரணமாக என்னை பா.ஜ.க-வில் இணைத்து கொண்டேன். இந்த நல்லாட்சி சாதனைகள் மக்களுக்குச் சென்றடைய உழைப்பேன்'' என்று தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close