Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீவா சிலைக்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடமைவாதியும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அரசால் கொண்டாடப்பட்டது. தோழர் ஜீவா, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்தவர் என்பதால் கன்னியாகுமரியில் அவரது பிறந்த நாளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாகர்கோவில் வேப்பமூட்டில் தமிழக அரசால் அமைப்பட்டுள்ள ஜீவா மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளுக்கும் நினைவு நாளுக்கும் அரசு சார்பிலும் தியாகிகளின் சார்பிலும் பொதுமக்களின் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.

அந்த வகையில், இன்று ஜீவா மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க, அ.தி.மு.க. அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மாலை அணிவிக்கும்போது தி.மு.க. மாவட்டச் செயலாளரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ்ராஜன் வந்திருந்தார். பல அரசு நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாமல் இருந்த சுரேஷ்ராஜனை சமீபகாலமாக மாவட்ட நிர்வாகம் அரசு நிகழ்வுக்கு அழைத்து வருகிறது.

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோகன், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பகவதி பெருமாள் ஆகியோர் தலைமையில் ஓ.பி.எஸ். அணியினர் வந்திருந்தனர். இவர்களை அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்ஸின் பிரிவுக்கு பின் மாவட்ட நிர்வாகம் எந்த அரசு நிகழ்வுக்கும் அழைக்கவில்லை. ஆனால், இன்று அ.தி.முக. இரு அணிகளின் இணைப்புக்கு முன் ஓ.பி.எஸ்ஸின் அணியினரை அரசு நிகழ்வுக்கு அழைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. நேற்று மாலையில் அரசு அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. இணைப்பு செய்தி போய்விட்டது. எனவேதான் ஓ.பி.எஸ்.அணியினர் அழைக்கப்பட்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் சொல்கின்றனர். ஜீவா சிலைக்கு தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மரியாதை செய்தனர். தி.மு.க.வும்  அ.தி.மு.க.வும் ஒன்றாக இணைந்து ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது குமரி மாவட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close