Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 196 மனுக்கள் பெறப்பட்டன..! மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமைதாங்கினார். 


 


அந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 196 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார். அதோடு, அந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அவற்றைப் பரிசீலித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உத்தரவிட்டார்.


மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, இக்கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் துறை சார்பாக ஒரு பயனாளிக்குக் கருணை அடிப்படையில் இரவு காவலர் பணிக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.


 

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close