Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரடி தாக்கி விவசாயி காயம் - எம்எல்ஏ-வின் அட்வைஸ்!

நெல்லை மாவட்டத்தின் மலையோரப் பகுதியில் கரடி தொல்லை அதிகரித்துள்ளது. கரடி தாக்கியதில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே இருக்கிறது, சிதம்பராபுரம் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. ஊருக்குள் நுழையும் சிறுத்தை வளர்ப்பு பிராணிகளான ஆடு, நாய் போன்றவற்றை அடித்துச் செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அத்துடன், கரடி தொல்லையும் அவ்வப்போது ஏற்படுகிறது. 

சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், மலையடிவாரத்தில் உள்ள தனது வாழைத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குட்டியுடன் வந்த கரடி ஒன்று திடீரென குணசேகரன் தலையில் அடித்தது. நிலைகுலைந்த அவர் தட்டுத் தடுமாறி அங்கிருந்து உயிர் தப்பினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் களக்காடு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

வசந்தகுமார்

விவசாயியைக் கரடி தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ உத்தரவின் பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு கரடியைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் விளைநிலத்திற்குச் செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.  

இதுபற்றி அறிந்ததும் நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வான ஹெச்.வசந்தகுமார், வனத்துறை அதிகாரிகளைச் சந்தித்து மலையோரக் கிராமங்களின் உள்ளே நுழையும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். தற்போது, சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி செய்யுமாறும் அவர் வனத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார். 

வசந்தகுமார்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’மலையோரப் பகுதிகளில் அடிக்கடி வன விலங்குகளால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. யானைகள் விளைநிலத்தைச் சீரழிக்கும் நிலையில், சிறுத்தை கரடி போன்ற விலங்குகளால் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதிலிருந்து அப்பகுதி மக்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்துவேன்.   

மலையடிவார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாய நிலத்துக்குச் செல்லும்போது தனியாகச் செல்வதை தவிர்க்க வேண்டும். கிராமத்தில் அருகருகே நிலங்களை வைத்து இருப்பவர்கள் கூட்டாகச் சென்றால் வன விலங்குகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியும். இதை விவசாயிகள் கவனத்தில் கொள்வது நல்லது. தற்போது கரடி தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வேன்’’ என்று தெரிவித்தார்.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close