Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் மாவட்டத்தில் டெங்கு பீதி...

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் மந்த நிலையிலேயே செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மர்மக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சலில் 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது திகிலை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மட்டும் கடந்த 5 நாள்களில் 4 பேர் டெங்குக் காய்ச்சலால் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஓமலூர் கோட்டகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கிருபனா கடந்த 15ம் தேதி மரணம் அடைந்தார். 16ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் விக்னேஷ் மரணம் அடைந்தார்.

17ம் தேதி ஓமலூர் முத்து நாயக்கன்பட்டி மரத்துக்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் விஜயன் மரணமடைந்தார். 19ம் தேதி காலை ஓமலூர்  வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சர்மிலன் மரணம் அடைந்துள்ளது. இதையடுத்து டெங்குக் காய்ச்சலால் ஓமலூர் பகுதியில் பொதுமக்கள் பெரிய அளவில் பீதி அடைந்திருக்கிறார்கள்.


இது தவிர நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கெடமலையைச் சேர்ந்த சீரான் மனைவி ஆண்டியம்மாள். வயது 55. இவர் கடந்த பத்து நாள்களாக கடுமையான காய்ச்சலில் பறிதவித்து வந்தார். சாலை வசதி இல்லாததால் மலையை விட்டு கீழே வர முடியவில்லை. 17ம் தேதி உறவினர்கள் தொட்டில் கட்டி இராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். சேர்த்த சில மணி நேரத்திலேயே இறந்து விட்டார்.


ராசிபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் புனிதசெல்வி வயது 9 காய்ச்சல் காரணமாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 4 நாள்களுக்கு முன்பு சேர்ந்தார்கள். டெங்குக் காய்ச்சல் உறுதி செய்த பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். 18ம் தேதி  மரணம் அடைந்து விட்டார்.


டெங்குக் காய்ச்சலில் பலியானோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், '' இந்த அரசியல்வாதிகள் பதவி வெறிபிடித்து அலைகிறார்கள். பொதுமக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பல அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யும் கருவிகள் இல்லை. கருவிகள் இருந்தாலும் பழுதாகி இருக்கிறது. ஓமலூர் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை கருவி பழுதானதால் 2 நாள்களாக பரிசோதனை செய்ய முடியாமல் விஜயன் இறந்து போனார். மொத்தத்தில் இந்த அரசு செயல்படாமல் இருக்கிறது. எதிர்கட்சிகளும் மக்கள் பிரச்னை பற்றி பெரிதாக பேசவில்லை'' என்கிறார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close