Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆளுநர் மாளிகைக்கு நாங்களும் போவோம் !' - வரிந்து கட்டும் தினகரன் ஆதரவாளர்கள்

ளுநர் மாளிகைக்கு நாங்களும் போக வேண்டிவரும் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி இன்று நிருபர்களிடம் கூறினார்.

புகழேந்தி

சென்னைப் பட்டினப்பாக்கத்தில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டுக்கு ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் வந்திருந்த நிலையில், அங்கே புகழேந்தியும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம்,  "அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்தது, ஐநூறு கோடி பேரமும் முடிந்தது, ஊழல் ஆட்சி என்று சொன்னவர்,  எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது இப்படி ஒன்று சேர்ந்து நிற்பதே ஓர் ஊழல்தானே ? 'தம்பி வா, தலைமை ஏற்க வா' என்று எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்தவர் சின்னம்மா சசிகலாதான். ஓ.பன்னீர்செல்வம்தான் சின்னம்மாவை மோசம் செய்கிறார் என்று அவரை மாற்றிவிட்டு இரண்டாவதாக சின்னம்மா கையைப் பிடித்து அழைத்து வந்த எடப்பாடி பழனிசாமி துரோகத்தையும், மோசத்தையும் சேர்த்தே செய்து கொண்டிருக்கிறார்" என்றார்.

 '19 எம்எல்ஏ -க்களைக் கையில் வைத்துள்ள நீங்கள் ஏன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றிருக்கக் கூடாது' என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.


அதற்கு பதிலளித்த புகழேந்தி, " பொறுத்திருந்து பாருங்கள். துரோகிகள் பதவியில் இல்லாத வகையில், சின்னம்மாவின் அறிவிப்பு கொஞ்சநேரத்தில் வெளியாகும். நாங்கள் ஆளுநர் மாளிகைக்குப் போன பின்னால்தான் ஆளுநர் மாளிகைக்குப் போனவர்களின் நிலையை நாட்டு மக்கள் பார்க்கப் போகிறார்கள். எங்கள் எம்எல்ஏ வெற்றிவேல், நேற்றே சொன்னார். துபாயிலும், சிங்கப்பூரிலும் வைத்து இணைப்புக்கான பேச்சுவார்த்தை போய்கொண்டிருக்கிறது என்றார். அதற்காக 500 கோடி ரூபாய்க்கும் மேலாக பேரம் நடந்து வருவதையும் சொன்னார். இப்படி நாங்கள் சொன்ன இரண்டாவது நாளே அணிகள் இணைந்துள்ளன. இனி அந்த அணிகளில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவர் காணாமல் போவார்கள். அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து பாதி எம்எல்ஏ-க்கள் வெளியேறிய பின்னர், அங்கிருந்த வைத்திலிங்கம் சசிகலாவை நீக்கப் போகும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்கிறார். தொடக்கத்திலேயே அதைத் துணிச்சலாகச் சொல்ல வேண்டியதுதானே? பதினெட்டு எம்எல்ஏ-க்கள் மட்டுமல்ல, இன்னும் நிறையவே எங்களின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அங்கே இருப்பதால்தான் வைத்திலிங்கம், அடக்கி வாசித்தார்" என்றார். தினகரனும், சசிகலாவும் இணைந்து எடுக்கப் போகும் முடிவு எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்குமோ...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close