Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச் 1 பி விசா பெறுவதில் இப்போதும் இந்தியர்கள்தான் முதல் இடம்!

மெரிக்காவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்-1பி (H-1B work visa)  விசா வழங்க, அந்நாட்டு அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் இந்திய ஐ.டி நிறுவனங்கள் ஆட்டம்கண்டன. அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்கூட இந்திய மென்பொறியாளர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையைக் குறைத்தன. பல ஆண்டுகாலமாகவே இந்திய ஐ.டி நிறுவனங்கள் ஹெச்1 பி விசா பெறுவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. தகுதியற்றவர்கள் இதுபோன்ற விசாக்களைப் பெற்று அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும்,  தகுதி வாய்ந்த அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை  அமெரிக்கா சுமத்திவந்தது.

மென்பொறியாளர்களின் அமெரிக்க பயணம்

எனவே, விசா வழங்குவதை  நெறிப்படுத்தும் வகையில் டொனால்டு ட்ரம்ப் அரசு,  கடும் கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் துறைதான் இதை வழங்குகிறது. புதிய கொள்கையின்படி,  சிறப்புத் தொழில் பிரிவின் கீழ் பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், மென்பொறியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த  அளவில் ஹெச் 1 பி விசாக்கள் வழங்கப்படுவது குறைக்கப்படவில்லை என்பது இந்தியர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி. 

அமெரிக்காவின் US Citizenship and Immigration Services வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான ஹெச் 1 பி விசா குறித்த புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு  இந்தியாவிலிருந்து 3,36,000  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஏற்கெனவே அமெரிக்காவில் வசிப்பவர்களும்  புதிய விண்ணப்பதாரர்களும் அடங்கும். விண்ணப்பித்தவர்களில் 1,97,129 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில், 2016-ம் ஆண்டு 3,99,369 பேர் ஹெச்1 பி விசா பெற விண்ணப்பித்திருந்தனர். 2016-ம் ஆண்டு 87 சதவிகிதத்தினருக்கு விசாக்கள் வழங்கப்பட்டன.

2007-ம் ஆண்டு ஹெச்1 பி விசாவில் அமெரிக்கா செல்பவர்களின் அதிகபட்ச சம்பளமாக ஆண்டுக்கு 68,159 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 92,317 அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசா பெறுவதில் இந்த ஆண்டும் இந்தியர்களே முதல் இடத்தில் உள்ளனர்.  சீனா, கனடா, தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடிக்கின்றனர். சீனா 2,96,313 ஹெச்1 பி விசாக்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்து,  இந்த விஷயத்திலும் இந்தியாவைத் துரத்துகிறது. 

இந்த  விசா பெறுபவர்களில் மென்பொறியாளர்களே முதல் இடத்தில் உள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக இன்ஜினீயர்களுக்கு 3,18,670 விசாக்களும், கல்வித்துறைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2,44,000 விசாக்களும், நிர்வாகத் துறையில் 2,45,000 விசாக்களும் 2017-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த விசாவில் அமெரிக்கா செல்பவர்களின் வயது சராசரி 25 முதல் 34. 
 
கடந்த 1989-ம் ஆண்டு மென்பொருள் துறை வேகமெடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில்,  அமெரிக்க அரசு ஹெச் 1 பி விசாவை அறிமுகப்படுத்தியது. அப்போது ‘ஆண்டு வருமானமாக 60 ஆயிரம் டாலர் இருக்க வேண்டும்' என விதிக்கப்பட்டது. அப்போதிருந்தே  இந்தியர்களும் சீனர்களும் அதிக அளவில் அமெரிக்காவுக்குப் பணிக்காகச் செல்ல ஆரம்பித்தனர். 

இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற நிறுவனங்கள், இந்த விசாக்களைப் பெறுவதில் முதல் இடத்தில் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள், விசா பெறுவதற்காக முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதும் நினைவுகூரத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close