Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதே நாற்காலி, மாறியது பதவி மட்டும்தான்!' ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வந்த கதை தெரியுமா ?

 



                                                 ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.

தே இருக்கை, அதே அறை... ஆனால் பதவிதான் துணை முதல்வர் என்று மாறியிருக்கிறது. பன்னீர்செல்வம், பழைய பன்னீராக வரக்கூடும் என்று தீர்மானித்தே அந்த அறையை முதல்வர் எடப்பாடி பயன்படுத்த வில்லையோ என்று எண்ணத் தோணுகிறது. முன்னாள் முதல்வர்கள் (ஓ.பி.எஸ். தவிர) பயன்படுத்திய அதே அறையைத்தான் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ். பயன்படுத்தியதோ, தனி அறை, தனி நாற்காலி. ஆறுமாத இடைவெளிக்குப் பின் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் சந்தித்திருக்கிறார், ஓ.பன்னீர்செல்வம். மூன்று முறை தனக்குக் கீழே அமைச்சரவை பொறுப்பிலிருந்த எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாகிப் போன வகையில் பழனிசாமிக்குச் சமமாக அல்லது அவருக்கு இணையாக துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்....ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் டி.டி.வி. தினகரன் பக்கத்தில் இருக்கிறார்கள்... இன்னும் எட்டுப் பேர் திவாகரனுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. உச்சகட்டமாக, "தேவைப்படும்போது எங்கள் 'ஸ்லீப்பர்-செல்கள்' அங்கிருந்தபடியே எந்த முடிவையும் எடுப்பார்கள்" என்று தினகரன் தரப்பு சொல்லி வந்ததையெல்லாம் நடைமுறையில் காட்டியிருக்கிறது, அ.தி.மு.க.வின் மற்ற இரண்டு அணிகளும்...  ஆக, ஸ்லீப்பர்ஸ் செல்கள் இந்த அணிகளில்தான் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.


ஓ.பி.எஸ். கையிலிருந்த முதல்வர் பதவி கடந்த பிப்ரவரி- ஐந்தாம் தேதி பறிக்கப்பட்டது. அடுத்து வந்த 7-ம்தேதி இரவு ஜெயலலிதாவின் நினைவிடத்தில், திடீர் தியானத்தில் உட்கார்ந்து விட்டார், ஓ.பி.எஸ். இதன்பின்னர் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணி என்று புதிய அணி உருவானது. ஓ.பி.எஸ். அணியில் இல்லாதவர்கள் சசிகலா அணி என்றழைக்கப்பட்டனர். அ.தி.மு.க. என்ற அடையாளம் மெல்ல மெல்ல தொலைந்துபோகத் தொடங்கியது.  பன்னீர்செல்வம் வகித்த முதல்வர் பதவி இனி சசிகலாவுக்குத்தான் என்ற வேகத்தோடு, சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு மண்டபம் சசிகலா பதவியேற்பு விழாவுக்குத் தயாரானது. அதே வேளையில்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதற்கடுத்து கூவத்தூர் காட்சிகள், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி, டி.டி.வி. தினகரனுக்குக் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி என்று பல காட்சிகள் அரங்கேறியது. அடுத்த காட்சியாக இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலையும் ரத்து செய்தது. ஓ.பி.எஸ். அணி வேண்டுகோளின் படி சசிகலா படங்கள் கட்சி அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டது. இதைப்பார்த்த தினகரன், 'அனைவரின் விருப்பம் அதுவென்றால் ஒதுங்கிக் கொள்கிறேன்'  தினகரன் தெரிவித்தார்... பின்  வெளியேறினார். மூன்றாவது அணியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி உருவானது. எடப்பாடி -ஓ.பி.எஸ் அணிகள் இணைப்புக்குக்  குழு ஏற்படுத்தப்பட்டது. ஒதுங்கியிருந்த தினகரன், திரும்பவும் கட்சிக்குள் வந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்ட ஓ.பி.எஸ். அணி கோரிக்கையை எடப்பாடி அணி ஏற்றுக்கொண்டது. அணிகள் இணைந்தன. 'எடப்பாடி முதல்வர், ஓ.பி.எஸ். துணை முதல்வர்' என்ற டீலிங் பேசி முடிக்கப்பட்டது.  பூரண அமாவாசை மற்றும் சூரிய கிரகண நாள்,  இணைந்து வந்த 21.8.2017 அன்று  ஓ.பி.எஸ். துணை முதல்வராகி இருக்கிறார்... அமாவசைக்கு அடுத்து வரும் நாள்களைத்தான் இனி கணக்கில் கொள்ள வேண்டும் !

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close