Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயிர்க் காப்பீட்டுத் தொகை கேட்டு 2 ஆயிரம் விவசாயிகள் உண்ணாவிரதம்

பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 30 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் இன்று திருவாடானையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்வது திருவாடானைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் ஆகும். வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சராசரி மழை பெய்து வந்ததால் அங்கு விவசாயம் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஒட்டு மொத்த ராமநாதபுரம் மாவட்டத்திலும் மிகக் குறைந்த அளவு மழையே பெய்தது. இதனால் திருவாடானை பகுதியும் முழுமையாக வறட்சியில் சிக்கியது.


இந்நிலையில், மழையை எதிர்பார்த்து விதை நெல்லை நட்டிருந்த விவசாயிகளுக்கு மழை பொய்த்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காக்க மத்திய அரசு பயிர்க் காப்பீடு திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இப்பகுதி விவசாயிகளும் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்திருந்தனர். ஆனால், திருவாடானை வட்டம் மங்களக்குடி உள் வட்டத்தைச் சேர்ந்த ஆண்டாவூரணி, ஓரியூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இது வரை பயிர் இழப்பீடு வழங்கப்படவில்லை.

2 ஆயிரம் விவசாயிகள் உண்ணாவிரதம்
 

இதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல், அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டல் போன்ற போராட்டங்களை இப்பகுதி விவசாயிகள் நடத்தினர். ஆனாலும் இழப்பீடு வந்து சேராத நிலையில் மங்களக்குடி உள் வட்டத்துக்குட்பட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் இன்று திருவாடானையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும் காரைக்குடி எம்எல்ஏ-வுமான கே.ஆர். ராமசாமி தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.மங்களம் முன்னாள் சேர்மன் நல்லசேதுபதி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close