Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க அரசுக்கு ஆபத்து இல்லை.. ஆட்சி கவிழாது.. - காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து!

அ.தி.மு.க-வின் இரு அணியும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்சி கவிழும் வாய்ப்பு இல்லை எனக் கருதுகிறேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ-வான வசந்தகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமார் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகத் தொடங்க வலியுறுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ’’அ.தி.மு.க-வில் நிலவிய குழப்பம் காரணமாகக் கடந்த சில மாதங்களாக தமிழக அரசு செயல்படாமல் இருந்தது. அரசு இன்று கவிழுமா, நாளை கவிழுமா? என்கிற நிலைமை நீடித்ததால் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த முடியாத நிலைமை நீடித்தது.

வசந்தகுமார்தற்போது இரு அணிகளும் இணைந்ததில் மகிழ்ச்சி. இனியாவது இந்த அரசு மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தும் என நம்பலாம். இரு அணிகளும் இணைந்ததால் இந்த அரசுக்கு நீடித்த ஆபத்து நீங்கிவிட்டது. இந்த அரசு அடுத்த 4 வருட காலத்தையும் கழித்து விடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இனி இந்த ஆட்சி கவிழும் வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக நிறையப் பேர் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவருடன் இன்று 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் அவரால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது என நினைக்கிறேன். அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் அவரவர் சுயநலத்துக்காகச் செயல்படுவதால், யாருமே ஆட்சியைக் கவிழ்க்க விரும்பவில்லை. அதனால் ஆட்சிக்கு நிச்சயமாக ஆபத்து இருக்காது. 

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடக்கிறது. தமிழக அரசு விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு நடந்துகொண்ட விதம் தமிழக மக்களிடம் பா.ஜ.க மீது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. மக்களின் ஆதரவு காங்கிரஸ் பக்கமாகத் திரும்பி இருக்கிறது. அதனால், தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுவோம். தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினேன்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close