Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்: காங்கிரஸ் ஆதரவு

மிழக அரசு ஊழியர்கள் இன்று (22-ம் தேதி) ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி துணைநிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

"மத்திய அரசு அறிவித்துள்ள 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பழைய ஓய்வுத் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று 22-ம் தேதி ( இன்று) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்துகிறார்கள். இவர்களின் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடக்க, ஒடுக்க நினைக்காமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் நியாமான போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும் இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close