Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 'உங்க நடவடிக்கை இதுதானா?' கலெக்டரை அதிரவைத்த கிராம மக்கள்!

 

"எங்கள் பகுதியில் அமைக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என்று உங்ககிட்ட இரண்டு தடவை மனு கொடுத்தோம். ஆனால், தற்போது கடை திறக்கப்பட்டுள்ளது. இதுதான் நாங்க கொடுத்த மனுவுக்கு நீங்க எடுத்த நடவடிக்கையா?" என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர் சுக்காலியூர் பகுதி மக்கள்.

கரூர் மாவட்டம்,சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள்தான் அப்படி ஒரு மனு கொடுத்தவர்கள். அவர்கள் சார்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய சக்திவேல், "எங்க பகுதியில் புதிதாக ஒரு டாஸ்மாக்கை திறக்கப் பார்த்தாங்க. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 13.4.2017 அன்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், கலால்துறை உதவி ஆணையர், டாஸ்மாக் கரூர் மாவட்ட மேலாளர்னு பலருக்கும் மனு கொடுத்தோம். அப்போது கலெக்டர் எங்களிடம், 'மக்களுக்கு விரோதமா கடை ஆரம்பிக்க மாட்டோம்'னு சொன்னார். கடந்த மூணு மாதமா கடை சம்பந்தமா எந்தத் தகவலும் இல்லை. 'கலெக்டர் இங்க கடை வர்றதைத் தடுத்துட்டார்'னு நினைச்சோம். ஆனால், எங்க கிராமத்தை ஒட்டி திருமாநிலையூர் பகுதியில் தனது விவசாய நிலத்தில் புதிய கட்டடம் கட்டி, டாஸ்மாக் கடை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார் வீராச்சாமி என்பவர். மறுபடியும், 'அங்கேயும் கடையைத் திறக்கக்கூடாது'னு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ம் தேதி கலெக்டரிடம் இரண்டாவது முறையாக மனு கொடுத்தோம். அப்போதும்,'மக்கள் விருப்பத்துக்கு மாறாக கடை திறக்கப்பட மாட்டாது'னு கலெக்டர் உத்தரவாதம் கொடுத்தார்.

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக காவல்துறை பாதுகாப்போடு கடையைத் திறந்து மதுபானம் விற்பனைசெய்துவருகின்றனர். அந்தக் கடை நெடுஞ்சாலை அருகிலேயே இருக்கு. அதோடு, பெண்கள், விவசாய வேலை பார்க்கும் வயல்பகுதியில் கடையைத் திறந்திருக்கிறார்கள். இதனால், அந்தப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளும் அந்த வழியாகத்தான் போய் வர்றாங்க. அதனால், அங்க கடையை நடத்தக்கூடாது. அதோடு, இரண்டு முறை கடை வேண்டாம்னு மனு கொடுத்த எங்களிடம், 'கடையை மக்கள் விருப்பத்துக்கு எதிராக திறக்க மாட்டோம்'னு சொன்ன கலெக்டர், சொன்னபடி நடவடிக்கை எடுக்கலை. அதனால்தான், இறுதியா எச்சரிக்கும் விதமா மனு கொடுத்துள்ளோம். இந்த முறையும் நடவடிக்கை எடுக்காம கலெக்டர் கடையைத் தொடர்ந்து நடத்த அனுமதிச்சா, நாங்க கடுமையான போராட்டங்களை நடத்த இருக்கிறோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close