Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து உயிரை விட்ட 5 வயது மான்! தொடரும் சோகம்!

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சுற்றி நேசனேரி, கரிசல்காளான்பட்டி, சுவாமி மல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியைச் சுற்றி ஏராளமான வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. ஆறு, குளங்கள், கண்மாய்களும் உள்ளன. வனவிலங்குகளின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற இடங்களாக இருப்பதால் மான், காட்டுப்பன்றி, மயில், முயல், கீரி, காட்டுப்பூனை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இந்தப் பகுதியில் வசித்துவருகின்றன.

DEER


மதுரை-விருதுநகர் நான்கு வழிச் சாலையின் இருபுறமும் இந்த வனவிலங்குகள் வசித்துவருவதால் உணவு, குடிநீர் போன்ற தங்கள் தேவைகளுக்காக அடிக்கடி சாலையைக் கடக்கவேண்டிய நிலை உள்ளது. பகல் நேரங்களில் மக்கள் அருகிலும் கிராமத்திற்குள்ளேயும்கூட மான்கள் இரைதேடி வருகின்றன. நான்கு வழிச் சாலையாக இருப்பதால், இந்தப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால் இரவு நேரங்களில் சாலையைக் கடக்க முயலும் மான்கள், வாகனங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

 இதைத்தொடர்ந்து,  இன்று திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில், ஊருக்குள் தண்ணீருக்காக வந்த  5 வயது ஆண் புள்ளிமான் கிணற்றுக்குள்  தவறி விழுந்து உயிரிழந்தது. அதன்பின், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறும்போது, "சாலையின் இருபுறமும் 113 ஹெக்டேர் கண்மாய்ப் பரப்பும், 435 ஏக்கர் பாசனப் பரப்பும் உள்ளன. வன உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடங்களாக இருப்பதால், மற்ற பகுதிகளைவிட இங்கே ஏராளமான வனவிலங்குகளைக் காணமுடியும். ஆனால், விபத்தில் மான்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அரிய உயிரினங்களான இந்த வனவிலங்குகளின் உயிரிழப்பு மிகவும் கொடுமையானது. அதேபோல பன்றி, மான் போன்ற விலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவங்களும் தொடர்கின்றன" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close