Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க தலைவர் கருணாநிதியை வைகோ சந்திக்க உள்ளதாகத் தகவல்!

தி.மு.க தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியுடன் வைகோ

 கருணாநிதி, உடல்நலக் குறைவால் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நேரடி அரசியலிலிருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு 94 வயதானது. அவரது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவையில் அவரது வைரவிழா ஆகியவை தி.மு.க. சார்பில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். உடல்நிலை ஒத்துழைக்காததால், அந்த மேடையில் கருணாநிதி இடம்பெறவில்லை. இதையடுத்து, கருணாநிதியால் தொடங்கப்பட்ட 'முரசொலி' நாளிதழின் பவளவிழா, சில நாள்களுக்கு முன்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. இதிலாவது கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க தொண்டர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி, கருணாநிதி அந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சைபெற்றுவரும்  கருணாநிதியை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துவருகின்றனர்.  சமீபகாலமாக, தி.மு.க-வுக்கு இணக்கமான போக்கை வைகோவும், ஏதாவது பிரச்னை என்றால் வைகோவுக்கு தி.மு.க-வும் குரல் கொடுத்துவந்தது. இந்நிலையில்தான், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைகோ சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close