Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆண்டவன் இருக்கான்... தண்டனை உறுதி..!' - சாபம்விட்ட தங்க தமிழ்ச்செல்வன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக, டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இன்று கடிதம்மூலம் தெரிவித்தனர். ஆளுநரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தனர் எம்.எல்.ஏ-க்கள்.

அப்போது கூறிய தங்க தமிழ்ச்செல்வன், 'அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் இணைந்து முதல்வரை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்தவர். சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வுக்கு எதிராக வாக்களித்தவர். இந்தக் கட்சியும் ஆட்சியும் இருக்கக்கூடாது என்று பல வேலைகளைச் செய்தவர். ஆனால், அவர் காலில் விழுந்து பேரம் பேசி கட்சிக்குள் மீண்டும் அழைத்துவந்துள்ளனர். இதற்கான அவசியம் என்ன? சசிகலா சொன்னதால்தான் எடப்பாடியை முதல்வராக்கினோம். சசிகலா இல்லாமல் இந்த அரசு கிடையாது. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிவைக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவந்தவர்களையெல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவர்களுக்குத் தண்டனை உறுதி. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் இப்போதும் தயாராகவே இருக்கிறோம்' என்றார் ஆவேசத்துடன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close