Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்தடுத்த அரசியல் திருப்பம்... மும்பை பறந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

வித்யாசாகர் ராவ்

முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆளும் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்றுக்கொள்வதாகக் கடிதம் கொடுத்துள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் திடீரென மும்பை சென்றுவிட்டார். இது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், சசிகலா தலைமையில் ஓர் அணியும் பிரிந்து செயல்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், பழனிசாமி தலைமையில் ஓர் அணி உருவானது. இந்த அணியினர் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனர். இதற்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். சில மாதங்களாக இழுபறி நீட்டித்துவந்த இணைப்பு விழா, நேற்று நடந்துமுடிந்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் மற்றும் நிதித்துறை வழங்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் கே.பி.முனுசாமிக்கு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பழனிசாமி அணியினர் இணைந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத தினகரன் அணியினர், அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், இன்று திடீரென ஆளுநர் மாளிகைக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் வருகைதந்தனர். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த அவர்கள், தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். அதில், முதல்வர் மீது நம்பிக்கையிழந்துவிட்டோம். இதனால் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் புகார் அளித்துள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றுவிட்டார். ஆளுநரின் இந்தத் திடீர் பயணம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசுக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாத நிலையில், ஆளுநரின் செயல்பாட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆளும்கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் கடிதம் தந்த நிலையில், ஆளுநரே சட்டமன்றத்தைக் கூட்ட உத்தரவிட வேண்டும். கருணாஸ் உட்பட 22 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும். தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால், தி.மு.க பரிசீலித்து முடிவு எடுக்கும்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close