Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நன்கொடை கேட்டு துணிக்கடை ஊழியரைத் தாக்கிய வி.சி.க. நிர்வாகி இடைநீக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு கடை ஊழியர் ஒருவரை நன்கொடை கேட்டு தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து அக்கட்சியின் நிர்வாகி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காகக் கடைகளில் நன்கொடை வசூலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தநிலையில், பஜார் வீதி பகுதியில் உள்ள கடை ஒன்றின் ஊழியர் நன்கொடை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வடமாநிலத்தைச் சேர்ந்த அந்தக் கடை ஊழியரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பனப்பாக்கம் பேரூராட்சி துணைச் செயலாளர் வினாயகம் தாக்கினார். அவர் தாக்கியது போன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்தநிலையில், வினாயகம் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கௌதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக வினாயகம் நடந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இதனால், கட்சித் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின்படி, பனப்பாக்கம் பேரூராட்சி துணைச் செயலாளர் வினாயகம் இன்று (22.8.2017) முதல் ஆறு மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close