Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பாளர் வளர்மதி வழக்கு! - விசாரணையில் நடந்தது என்ன?

வளர்மதி

குண்டர் சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாணவர் வளர்மதியின்  வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இயற்கைவளத்தை பாதித்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவரக்கூடாது என  பிரச்சாரம் செய்த, இயற்கைப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சேலம் வளர்மதி, ஜெயந்தி ஆகியோர் கடந்த மாதம் 12-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். பின்னர் வளர்மதி மட்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதால், கோவை  சிறைக்கு மாற்றப்பட்டார். 

குண்டர் சட்டத்தின் கீழ் மாணவர் வளர்மதி மீது வழக்குத் தொடுத்ததை எதிர்த்தும் அவருக்கு இடைக்கால பிணை வழங்குமாறும் அவரின் தந்தை மாதையன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் மீதான விசாரணை நேற்றும் நடந்தது. 

முன்னதாக கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின்போது, ஆக. 21-ம் தேதியன்று (நேற்று) அரசுத் தரப்பில் பதில் அளிக்கவேண்டும் என்றும் இவ்வழக்கில் கடைசி விசாரணை நடத்திமுடிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் நேற்றும் அரசுத் தரப்பில் மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், வரும் திங்களன்று அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. 

இதற்கிடையில் சென்னை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள குண்டர் சட்ட அறிவுரைக் குழுமம் முன்பாக, நேற்று பிற்பகல் 2 மணிவாக்கில் மாணவர் வளர்மதி நேர்நிறுத்தப்பட்டார். அப்போது குழுமத்தின் உறுப்பினர்கள், வளர்மதியிடம் அவர் மீதான ஆறு வழக்குகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு வளர்மதி விளக்கமளித்தார்.

 வளர்மதி

சேலம் வளர்மதி முழக்கம்

வளர்மதியின் சார்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலச் செயலாளரும் மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேரா. முரளி, வாதங்களை எடுத்துவைத்தார். 

பேரா. முரளிஅப்போது,” உயர் நீதிமன்ற அனுமதியுடன் நடந்த புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்துக்கு வருமாறு மாணவர் வளர்மதியும் ஜெயந்தி என்பவரும் துண்டறிக்கைகளை வழங்கினர். ஆனால் சேலம் நகரில் பொதுச்சொத்துகளைச் சேதம் விளைவிக்கவும் எரிக்கவும் வளர்மதி அறைகூவல் விட்டதாக போலீசார் காரணம் கூறியுள்ளனர். அவரின் முகநூல் பதிவுகளில் மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்து பதிவுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அவர் தடைசெய்யப்பட்ட எந்த அமைப்பையும் ஆதரிக்கவில்லை எனக் கூறினோம். நாட்டின் எந்தக் குடிமகனுக்கும் எதையும் மறுத்து கருத்துக்கூறும் உரிமை உண்டு. வளர்மதியின் கருத்துப்பரப்பலானது மனித உரிமைகளுக்கு ஆதரவானது. அவர் நீதிக்காகவே குரல் கொடுத்துள்ளார். உறுதியாக அது அழிவுக்கான குரல் இல்லை. தமிழகமே கட்சி வேறுபாடு இல்லாமல் போராடிக்கொண்டிருக்கும் ஒன்றுக்காகவே அவரும் குரல் கொடுத்துள்ளார். முதல் முறையாக அரசியல் பிரச்சாரம் செய்த ஒரு பெண்ணுக்கு ஒரு மாணவருக்கு குண்டர் சட்ட வழக்கு பதிந்திருப்பது, அநியாயம். எனவே, வளர்மதி மீதான குண்ட சட்ட வழக்கை ரத்துசெய்யவேண்டும் ”என்று பேரா. முரளி வாதங்களை எடுத்துவைத்தார். 

சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அறிவுரைக் குழுமத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக, காலை 10.30 மணிக்கு கோவையிலிருந்து வளர்மதியை ஆயுதம் தாங்கிய போலீசார் பலத்த பாதுகாப்புடன் தனி வாகனத்தில் அழைத்துவந்தனர். அறிவுரைக் குழுமத்தில் ஆஜராவதற்கு முன்னர் காத்திருக்கநேரிட்டது. அப்போது ஆயுதப் போலீசார் சூழ வளர்மதி இருக்கும் படத்தைப் பிடிக்க வளர்மதிக்கு ஆதரவானவர்கள் முயன்றபோது, உடன்வந்த போலீசார், கெடுபிடி காட்டினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close