Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’எனக்கு ஓட்டுப் போட்டவங்களுக்குத் தண்ணீர் கொடுங்க!’ - செல்லூர் ராஜூ கடுகடுப்பு !

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மத்தியக் கூட்டறவு வங்கி சார்பாக ரூ.15கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன . இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் , கார்ப்பொரேஷன் கமிஷனர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர் .

sellur raju

இந்த விழா முடிந்த பிறகு அப்பகுதிப் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் குறைகளைத் தீர்ப்பதாகப் பொதுமக்களிடம் தெரிவித்தார். |

பின் காரில் ஏறிக் கிளம்பிய போது பழங்காநத்தம் பகுதியைச் சார்ந்த பெண்கள் சிலர் அமைச்சர் காரை மறித்து தங்கள் பகுதியில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர். உடனே செல்லூர் ராஜூ அதிகாரிகளிடம் ’ஏன் தண்ணீர் வழங்குவதில்லை’ என்று கேள்விகள் எழுப்பினார்.

ஆடிப்போன அதிகாரிகள், ‘தொடர்ச்சியாகத் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவ்வப்போது சில பிரச்னைகள் காரணமாக வழங்கப்படவில்லை. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ என்று தெரிவித்தனர்.

பொது மக்கள் தொடர்ச்சியாக நடக்கும் புகார்களை அடுக்க, அதிகாரிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ ’எனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்குத் தண்ணீர் கூட தராமல் என்ன செய்கிறீர்கள் உடனடியாக இவர்களின் குறைகளைத் தீர்த்துவையுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு காரில் கிளம்பிச் சென்றார் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close