Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வின் அடிப்படையில் நாளை மறுநாள் தொடங்குகிறது கலந்தாய்வு!

தமிழகத்தில் நாளை மறு நாள் மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவப்படிப்பு கலந்தாய்வு


கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்தில் விலக்கு அளிக்கப்பட்டநிலையில், நடப்பு ஆண்டு நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதனிடையே, நீட் தேர்வு நடைபெற்றதால் தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டங்கள் வலுத்தன. இதனால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது.


குறிப்பாக, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பிரதமர் மோடியைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அதேபோல, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர்கள் நட்டா மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோரைச் சந்தித்தார். இதைத்தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும், அவசரச் சட்ட வரைவு ஒன்றைத் தமிழக அரசு இயற்றியது.


இதற்கு மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகங்கள் விலக்கு அளித்திருந்தன. இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. மேலும், செப்டம்பர் 4-ம் தேதிக்குள், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியில் நாளை வெளியாகிறது. 

கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close