Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது..! தமிழிசை, ஹெச்.ராஜா கருத்து

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளனர். 


நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. எனவே, தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உடனடியாகக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும், செப்டம்பர் 4-ம் தேதிக்குள், நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'மத்திய தலைமை வழக்கறிஞரின் வாதத்துக்குப் பிறகு, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரும் காலங்களில் மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார்படுத்துங்கள். இந்தத் தீர்ப்பால் மாநில வழிக் கல்வி பயின்றவர்கள் மற்றும் கிராமப் புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்' என்று பதிவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, 'நீட் தேர்வு மாணவர்களுக்கு வாழ்த்துகள். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை என்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close