Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜாதி, மதக்கலவரத்தில் நமக்கு நான்காம் இடம்' - ஆதங்கப்பட்ட கனிமொழி

மதரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில், கோவையில் 'மக்கள் மேடை' என்ற அமைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் மேடை


இது குறித்து கனிமொழி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்," 'மதம் மனிதனை மிருகமாக்கும். சாதி மனிதனை சாக்கடையாக்கும்' என்று பெரியார் அன்று சொன்னதை நன்கு உணர்ந்துகொண்ட கோவை மக்கள் ஒரு சரியான காலகட்டத்தில் மக்கள் மேடையைத் தொடங்கியுள்ளனர். ஒரு தாயாக, வளரும் குழந்தைகளுக்கு இங்கு எதிர்காலம் பாதுகாப்பில்லாததாகவே உணர்கிறேன். பல்வேறு மத நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கொண்டது நம் நாடு. 'நட்டகல்லும் பேசுமோ?' என்கிறார் சிவவாக்கியர்.

ஆனால், பல தேவையற்ற வழக்கங்கள் மக்கள் மேல் திணிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சில வருடங்கள் முன்பு வரை பிள்ளையார் சதுர்த்தி என்பது குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. இன்று கலவரங்களும் மோதல்களும் வெடிக்கும் ஓர் அபாயகரமான நிகழ்வாக மாறிவிட்டது. உலக அளவில் ஜாதி மதக் கலவரங்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இப்போது நான்காம் இடத்திலுள்ளது. இன்றைய இளைஞர்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த ஓர் எதிர்கால சூழலைத் தர வேண்டியது நமது கடமை. 'மக்கள் மேடை' அதற்கான ஒரு நல்ல முயற்சி" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close