Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்!’ - நளினி சிதம்பரம்

நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்திடவும், செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மாணவர்கள் கலந்தாய்வை நடத்தி முடித்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்வியில் சேர வேண்டும் என்று காத்திருந்த மாணவர்களின் கனவு கானல் நீராகியிருக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் 24.08.2017 அன்று மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மருத்துவ கலந்தாய்வு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இரண்டு சட்டத்தை இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது தமிழக அரசு. அந்த இரண்டு சட்டத்துக்கு இன்னமும் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதன்பின்பு நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடும், சிபிஎஸ்இ மற்றும் இதரப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15% ஒதுக்கீடும் என்ற அரசாணையைப் பிறப்பித்தது. 

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பள்ளி மாணவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

தமிழக அரசு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்களிக்கலாம். இதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவிக்க, தமிழக அரசின் சார்பில் ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அரசாணைக்கு ஒப்புதல் பெற மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. உள்துறை அமைச்சகம் அரசாணைக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்த அவசர அரசாணையை எதிர்த்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தொடரப்பட்ட வழக்கில் நீட் ஓராண்டு விலக்குப் பெறுவதற்கான அவசரச் சட்டம் செல்லாது என்றும், மருத்துவ நீட் அடிப்படையிலேயே மாணவர்கள் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். மாணவர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் சேர்க்கையை நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதும், இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிய வருகிறது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் 24.08.2017 அன்று மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ’நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்’ என்று  தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close