Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் விடிய விடிய சோதனை - தலைமறைவு குற்றவாளிகள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இதற்குக் காரணம் போலீஸார் வெறும் ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுவதுதான் எனப் பொது மக்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்த நிலையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் தனிப்படைகளை அமைத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் தனிப்படை போலீஸார் அதிரடி சோதனைகளை நடத்தி வந்தனர். அப்போது தலைமறைவாக இருந்த 100 குற்றவாளிகளைக் கைது செய்தனர். மேலும், பல குற்றவாளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி போன்ற சப் டிவிஷன்களில் விடியவிடிய போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடித்தனர். அதில் கன்னியாகுமரியில் ஒரு குற்றவாளியும், தக்கலையில் மூன்று குற்றவாளிகளையும், நாகர்கோவிலில் ஒரு குற்றவாளியும், குளச்சலில் வாராண்டு குற்றவாளிகள் ஒன்பது பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிரமாகக் குமரிமாவட்ட போலீஸார் செயல்பட்டு வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close