Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு உகந்ததா, இல்லையா? 29-ம் தேதி தீர்ப்பு

இரட்டை இலை

 

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் kiளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டதால், 45 ஆண்டுகளாக அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமாக இருந்துவந்த இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. அ.தி.மு.க 3 அணிகளாகப் பிரிந்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்காகச் சின்னத்தையே நம்பியுள்ளன. மக்கள் மத்தியில் கட்சி சின்னம் ஆழமாகப் பதிந்துள்ளது. சின்னம் முடக்கப்பட்டு ஐந்து மாதம் ஆகிவிட்டது. அ.தி.மு.க-வில் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. தென்னிந்திய சினிமா வர்த்தக சபைத் தேர்தலில் பிரச்னை எழுந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதைப் பின்பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் அணியிலுள்ள அ.தி.மு.க-வின் அனைத்து எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டுக்கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி யாருக்கு ஆதரவு என்பதைக் கண்டறிய வேண்டும். முன்னாள் நீதிபதிகள் முன்பு நடக்கும் இந்த நியாயமான தேர்தலில் வெற்றிபெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா? என்பது தொடர்பாக வரும் 29-ம் தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close